விக்ரம் பட ப்ரோமோஷனுக்காக கமல் செய்த காரியம்.. புகைப்படம் வைரல்.!
Author: Rajesh29 May 2022, 1:31 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்துள்ளன.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். எதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதேசமயம் விக்ரம் படம் இன்னும் சில நாள்களில் வெளியாகவிருப்பதால் படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.