கமலின் விக்ரம் வசூல் வேட்டை.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..?
Author: Rajesh10 June 2022, 11:29 am
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் விக்ரம். கமல் ரசிகரான லோகேஷ் அவரின் குருநாதராக கமலை வைத்து சம்பவம் செய்துள்ளார் என்றே கூறலாம். அந்தளவிற்கு விக்ரம் திரைப்படம் பயங்கர மாஸ்ஸாக எடுத்துள்ளார் லோகேஷ்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர். இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே ஒரு வாரத்தில் அதிகம் வசூல் செய்த படமாக விக்ரம் வந்துள்ளது. கண்டிப்பாக தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த பாகுபலி 2 சாதனையை விக்ரம் முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.