விக்ரம் சக்சஸ் மீட்டில் கமல் செய்த செயல்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. வைரல் பதிவு.!

Author: Rajesh
18 June 2022, 5:37 pm

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் கடந்தும் கூட இப்போதும் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஒடிக்கொண்டு இருக்கிறது. மேலும் விரைவில் இப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற சாதனை படைக்க உள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்துள்ளது இதில் விக்ரம் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த சக்சஸ் மீட் முடிந்தவுடன் நட்சத்திரங்களுடன் பார்ட்டி நடந்துள்ளது போல் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் லோகேஷ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், அனிருத் என அனைவருக்கும் கமல் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் லோகேஷ் “We all love you soo much kamal sir” என பதிவிட்டுள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!