திமுக எம்பியை முற்றுகையிட்ட மலைக்கிராம மக்கள்… பள்ளங்கி பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனப் புகார்…!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 4:55 pm

கொடைக்கானலில் திண்டுக்கல் திமுக எம்பியை மலைக்கிராம கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் இருந்து வருகிறது. இங்கு சில கிராமப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து தங்களது அன்றாட தேவைக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து கொடைக்கானலில் வட்டக்கானல், வெள்ளகெவி, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் செல்போன் டவர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தொலைபேசி டவர் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரப் பிரச்சனை உள்ளிட்ட பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, கொடைக்கானலில் உள்ள பள்ளங்கி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு சாலை வசதி இல்லை எனவும், முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை எனவும் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!