5 ஏக்கர் அரசு நிலத்தை இஸ்லாமிய அடக்கதளமாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு ; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்.. போலீசார் சமரசம்..!!
Author: Babu Lakshmanan18 March 2023, 11:58 am
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5.05 ஏக்கர் அரசு இடத்தை இஸ்லாமிய அடக்க தளத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 5.05 ஏக்கர் உள்ளது. இதை முஸ்லிம் அடக்க ஸ்தலமாக மாற்றுவதற்கு வருவாய்த் துறையினரின் பதிவேட்டில் மாற்றப்பட்டுள்ளது.
அதை மீட்டு இலவச வீட்டுமனை, விளையாட்டு மைதானம், ரேஷன் கடை நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு மீட்டு தரக்கோரி அம்பேத்கர் நகர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாச்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊத்துக்கோட்டை சமுதாயக்கூடம் அருகே வருவாய்த் துறையினரை கண்டித்து அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு தரக்கோரி அம்பேத்கர் கிராம மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போராட்டத்தை கைவிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அறவழி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தி கைது செய்யும் நோக்கத்தோடு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.