எங்க கிராமத்துக்கு விஜய் வருவாரா? ஏக்கத்தில் மக்கள் : என்ன காரணம்?
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 2:23 pm
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடும்பத்துக்கு மேலாக வசித்து வருகின்றார்.
இந்த கிராமம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தந்தை இயக்குனர் S.A சந்திரசேகர் சொந்த கிராமம் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்க : விஜய் பட வில்லன் நியூயார்க்கில் திடீர் கைது… துருவி துருவி விசாரணை.!!
இந்த கிராமத்தில் தூய மிக்கேல் அதிதூதர் பங்கின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 75 ஆவது பவள விழா கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட பவள விழா மலர் மூலமாக தெரியவந்துள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை காலம் வரை இந்த கிராமத்தில் வாழ்ந்து உள்ளனர்.
சேனாதிபதி பிள்ளை ரெயில்வேயில் பணிபுரிந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரமக்குடி சென்றுவிட்டனர். கொம்படி கிராமத்தில் இன்னும் எஸ்.ஏ. சந்திரசேகர் உறவினர்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் முன்னோர் வாழ்ந்த வீடு, நிலங்கள் உள்ளன.
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பூர்வீகம் தங்கள் கிராமம் என்றும், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் திரைப்பட துறையில் சாதித்தது தங்களது கிராமத்திற்கு பெருமை என்றும், தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்று நெகிழ்வுடன் தெரிவித்தனர்.