கிணத்தை காணோம் கதையா?.. காணாமல் போன சாலையால் அலறும் அதிகாரிகள்..!

Author: Vignesh
26 August 2024, 5:13 pm

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை கிராமத்தில் இருந்து குண்டு பட்டி, பழம்புத்தூர் செல்லும் முக்கிய சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றன.

சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு முடிய தார் சாலை போட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் உள்ளது. கொடைக்கானலில், உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு கொடைக்கானல் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் முக்கிய கிராமங்களில் ஒன்று.

மேல்மலையிலிருந்து அவசர காலங்களில் இச்சாலையை தான் இரண்டு கிராமங்களுக்கும் முக்கிய சாலையாக விளங்குகின்றது. சாலையின் வழியில் விவசாயிகள் தங்கள் பயிரிட்ட விலைப் பயிர்களை இவ்வழியாக தான் கொண்டு செல்லும் சூழ்நிலையில் உள்ளன.

மேலும், இக்கிராமத்திற்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வந்து செல்ல முடியாத பாதையாக மாறிக் கொண்டு வருகிறது. மேலும், இச்சாலையில் 2 முதல் மூன்று அடி பள்ளங்கள் அனேக இடங்களில் காணப்படுகிறது. இரண்டு சக்கர வாகனத்தில், செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இப்பாதையில், அடிக்கடி கீழே விழுந்து பெருங்காயங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பூம்பாறை ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை கவனத்தில் கொண்டு பல வருடங்களாக பழுதாகி கிடக்கும் சாலையை கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!