10 நாளா தண்ணி இல்ல.. கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்.. தாகம் தீர்க்க தவிக்கும் கிராம மக்கள்..!

Author: Vignesh
31 May 2024, 6:57 pm

உத்திரமேரூர் அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரிவர வராததால் டிராக்டர் மூலம் வழங்கும் குடிநீரை பிடிப்பதற்காக கிராம மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசூர் கிராமத்தில் 600 மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மின் மோட்டார் பழுது மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் ஊராட்சி நிர்வாகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வழங்காததால் குடிநீருக்காக பொதுமக்கள் பெரும் அவதி படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: ஜெயிக்க போறது நாங்கதான்.. ‘இந்தியா கூட்டணி’ அமோக வெற்றி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி..!

இதுகுறித்து கிராம நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மத்திய அரசின் ஜல் ஜீவன் குடிநீர் திட்டமும் இக்கிராமத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேபோல், மோட்டார் மினி குடிநீர் தொட்டியும் இந்த கிராமத்தில் இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் டிராக்டர் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். எனவே, அழிசூர் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 10 நாட்களாக தண்ணீர் வராத காரணத்தால் மிகவும் அவதிப்பட்டதாகவும் அந்த கஷ்டம் தங்களுக்கே தெரியும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 211

    0

    0