ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம மக்கள்.. விசாரணையில் சிக்கிய சிப்ஸ் தொழிற்சாலை.!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 8:28 am

ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம மக்கள்.. விசாரணையில் சிக்கிய சிப்ஸ் தொழிற்சாலை.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே சென்னிவீரம்பாளையத்தில் செயல்படாத உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலை கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறந்து சிப்ஸ் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தடுமாறியதால் தடம் மாறிய ஹெலிகாப்டர்.. நூலிழையில் உயிர் தப்பிய AMITSHAH!

அப்போது அந்த சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய அமோனியா கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த அமோனியா கேஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது.

குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் அமோனியா வாயு கசிவு திடீரென ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சற்று தொலைவில் உள்ள கோவில் மற்றும் சாலையில் தஞ்சமடைந்தனர்.

தகவல் அறிந்த காரமடை போலீசார் மற்றும் 108 மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்ட பொது மக்களுக்கு அவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் வாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் போலீசார் மற்றும் துறை சார்ந்தவர்கள் வாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 269

    0

    0