KGF-3-ல் வில்லனாக நடிக்கப்போவது இவரா.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படக்குழு..!

Author: Rajesh
11 May 2022, 2:14 pm

கே.ஜி.எப் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் அதன் இரண்டாவது பாகத்தை மேலும் எதிர் நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி கே.ஜி.எஃப்-2. பான் – இந்தியா ரிலீஸாக வெளியானது.
இந்திய சினிமாவில் இந்த படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்றால் எந்த அளவுக்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். தென்னிந்தியா மட்டுமல்ல; வசூல் வேட்டையில் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை இந்த கே.ஜி.எஃப்- 2. இரண்டாம் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இதன் அடுத்த பாகத்துக்குத் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என பலரும் தங்களது கற்பனைக் குதிரையை பறக்கவிட்டு ஏகப்பட்ட கதைகளை சொல்லிவருகின்றனர். கேஜிஎஃப் சீரிஸ்களைப் பொறுத்தவரை யஷ்ஷுக்கு மட்டுமல்லாது அவற்றில் வில்லன்களாக நடிப்போர்க்கும் பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கனமான ரோல்கள் கொடுக்கப்படுகின்றன.
இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் கதாபாத்திரம் அதில் இறந்துபோவதாகக் காட்டப்பட்டது. இதனால் மூன்றாம் பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளது யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 3ஆம் பாகத்தில் வில்லனாக நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிக் கவனம் பெற்றிருந்தார் ராணா. அந்தக் கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கமே கே.ஜி.எஃப்- 3 படத்தில் அவர் இணைவதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஹாலிவுட் லெவலில் இப்படத்தின் ரிலீஸைக் கொண்டு செல்லத் திட்டம் உள்ளதாம். அதனால் ராணா மட்டுமல்லாது சில ஹாலிவுட் நடிகர்களும் இதில் வில்லன்களாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!