‘ஏய், நிறுத்து.. நிறுத்து’… அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி மது குடித்த போதை ஆசாமி ; வைரலாகும் அலப்பறை வீடியோ..!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 1:44 pm

விழுப்புரம் முத்தாம்பாளையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தி சாராய பாக்கெட்டை பிரித்து மதுபிரியர் ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் அருகேயுள்ள முத்தாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விழுப்புரம் நகர பகுதிக்கு வர கூடிய பிரிவு சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி சென்னை, விக்கிரவாண்டி, திண்டிவனம், விழுப்புரம் நகர பகுதிக்கு செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிறுத்ததை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தம் அருகில் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு அங்கு வருபவர்களிடம் வம்பிழுப்பது, வாகனங்களை மறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள், வாகனஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மது பிரியர் ஒருவர் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டை பிரித்து சாலையிலையே மது அருந்திவிட்டு அவ்வழியாக வரக்கூடிய அரசு பேருந்தை நிறுத்தி, சாராய பாக்கெட்டினை பிரித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி மது அருந்தும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.

https://player.vimeo.com/video/881587332?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இதனால் அவ்வழியாக சென்றவர்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டதால் மது அருந்துவதை அந்த பகுதியில் இருந்த நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!