மரத்தடியில் காசு வைத்து சூதாடிய சிறுவர்கள்: பெரியவர்கள் மத்தியில் நடந்த சூதாட்டம் -வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Author: Vignesh
24 October 2022, 6:00 pm

விழுப்புரம் அருகே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்து சீட்டு கட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் பின்புறம் தினந்தோறும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சீட்டுக்கட்டு விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று தீபாவளிக்கு வெளியூர்களில் இருந்து வந்த பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் சீட்டுக்கட்டு விளையாட்டில் அதிகாலை முதல் இருந்து விளையாடி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தற்போது காசு வைத்த சூதாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 404

    0

    0