‘எல்லாமே பேட்ச் வொர்க்கா..?’… அரசு பேருந்தின் கோடைகால அவலம்.. புலம்பியபடி பயணிக்கும் பொதுமக்கள்..!!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 5:09 pm

விழுப்புரம் அருகே திண்டிவனம் பகுதியில் அரசு பேருந்தின் அவலத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில், பலத்த காற்றுடன் சிறிது நேரம் மழை பொழிந்தது. கோடை வெப்பம் தணிந்தது என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சமயத்தில் அரசு பேருந்தை நம்பி பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் உள்ளனர்.

மேலும் படிக்க: ‘உயிருக்கு பாதுகாப்பு இல்ல’… கட்டுடன் வந்து நீதிபதியிடம் கோரிக்கை வைத்த சவுக்கு சங்கர் ; நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு !!!

இந்த நிலையில் திண்டிவனம் – ரெட்டணை (இரட்டணை) மார்க்கத்தில் 16c என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் கூரை மற்றும் கட்டுமானம் பெரும்பகுதி ‘பேச் வொர்க்’ செய்யப்பட்டதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று பெய்த சிறிது மழைக்கே மக்கள் அப்பேருந்தில் பயணிக்க மிகவும் இன்னலுற்றுள்ளனர்.

இதை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!