பாண்டிச்சேரிக்கு வா.. தொடர் வீடியோ கால்.. அரசுக் கல்லூரி பேராசிரியர் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan8 February 2025, 3:50 pm
விழுப்புரத்தில், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் அழைப்பு விடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு, அந்த வகுப்பு பேராசிரியராக குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பேராசிரியர் குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது, தவறான அனுகுமுறையில் பேசி, பாண்டிச்சேரிக்குப் போகலாம் எனக் கூறி அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் மீண்டும் வீடியோ கால் செய்த குமார், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீட்டுப் பணம் கேட்கச் சென்ற இளம்பெண்.. தாயாருக்கு தனி அறை.. ஜூஸால் நிகழ்ந்த விபரீதம்!
எனவே, இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பேராசிரியர் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.