கனமழையால் தவிக்கும் விழுப்புரம்.. மாற்றுச் சாலையில் புகுந்த வெள்ளம் : போக்குவரத்தை சரி செய்த கிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 11:33 am

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது.

இதில் குறிப்பாக, மாம்பழப்பட்டு பகுதியில் விழுப்புரம் – திருக்கோவிலூர் இடையேயான பிரதான சாலையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்த மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல இயலாது என்று சாலையின் எந்தப் பக்கமும் நேற்றிரவு எச்சரிக்கை செய்யவில்லை.

இதையடுத்து, மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியது தெரியாமல் நேற்றிரவு பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்றன. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பின. சில வாகனங்கள் எந்த வழியாக செல்வது எனத் தெரியாமல் அங்கேயே நின்றன.

இதையடுத்து, இன்று காலை கிராம மக்கள் தண்ணீர் செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்றினர். தற்போது அனைத்து வாகனங்களும் தண்ணீர் குறைந்ததால் அந்த வழியாக சென்று வந்து கொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ. மழை கொட்டியது. சூரப்பட்டு 21, முகையூர் 20, கெடாரில் 15, முண்டியம்பாக்கம் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. நேற்று நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை காலை வரை நீடித்தது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu