’10 நிமிஷ வேலைதான்… நீ இஷ்டப்பட்டா மட்டும் தான் உன்கூட…’ கணவனின் இறப்பு சான்றிதழை கேட்ட இருளர் இன பெண்ணிடம் VAO சில்மிஷ பேச்சு…!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 4:36 pm

விழுப்புரம் அருகே கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டதற்கு கணவனை இழந்த பெண்ணுக்கு, பாலியல் இச்சைக்கு அடிபணிய வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் வற்புறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா உட்பட்ட நல்லா பாளையத்தில் உள்ள இருளர் பாளையம் பகுதியை சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா. இவரது கணவர் பெயர் ஐய்யனார், கடந்த 2014ம் ஆண் ஆகஸ்ட் 13ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 11 வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.

இதனிடையே, நல்லா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் சென்று இறப்புச் சான்று கேட்டுள்ளார் சங்கீதா. அப்பொழுது, இறப்பு சான்றுக்கு ரூபாய் 5000 கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் கிராம நிர்வாக அலுவலர். ஆனால் நான் கொஞ்சம் ஏழை பட்டவள் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என அவர் கூறவே, ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டுள்ளார் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ்.

இந்த நிலையில், சங்கீதாவின் செல் எண்ணை பெற்றுக் கொண்டு, இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு, “உனக்கு சான்றிதழ் நான் பெற்றுக் கொடுத்து விட்டேன், மேலும் உனக்கு விதவை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று தருகிறேன், நீ எனக்கு வேணும் என பாலியல் இச்சைக்கு அடிமையாக வேண்டும்,” என செல்போனில் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது தம்பி மூலம் தொடர்பு கொண்டு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பொழுது, “அவர் நீ உன்னால் என்ன செய்ய முடியும். நான்தான் இறப்பு சான்றிதழ் வாங்கி தந்தேன், உன்னால் என்ன செய்ய முடியும் போங்க,” என சொல்லிவிட்டு செல்போனை துண்டித்து விட்டதாக தெரிகிறது.

பின்னர் இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட அந்த விதவைப் பெண் சங்கீதா, நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கிராம நிர்வாக அலுவலர் செல்போனில் பாலியல் இச்சைக்கு அடிமை பணியை சொன்ன ஆடியோ வெளியாகியும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 611

    0

    0