மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 6:58 pm

மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல அலங்காரங்களில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் வடிவமைத்து இருந்தனர்.

வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தையும் கொடைக்கானல் ஏரி அருகே ஒன்று சேர்த்தனர். ஒன்று சேர்ந்த பக்தர்கள் சிறிய சிலைகள் 500 க்கும் மேற்பட்டவையும் பெரிய விநாயகர் சிலைகள் 50க்கும் மேற்பட்டவை வைக்கப்பட்டது .

இந்த ஊர்வலமானது ஏரி பகுதியில் இருந்து துவங்கி பேருந்துநிலையம், அண்ணாசாலை,மூஞ்சிக்கல் வழியாக சென்று அரசு பள்ளி வரை சென்றது. தொடர்ந்து அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது .

விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 289

    0

    0