நெருங்கும் விநாயகர் சதுர்த்தி… சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : தடைகளை விலக்குமா தமிழக அரசு? எதிர்பார்ப்பில் சிலை தயாரிப்பாளர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2022, 9:30 am
கோவை செல்வபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
இந்துக்களின் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31 புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைகளை அரசு நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை எழுப்பி வருகிண்றனர். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும் கடந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1அடி உயரத்தில் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வாகனங்களில் களிமண் எடுத்து வரப்பட்டு அச்சு மூலம் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மேலும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பாக இருக்கும். சிலை நன்கு விற்பனையாகும் என்ற நம்பககையினை கைவினை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.