குடியால் வாழ்க்கையை தொலைத்த பிரபல கிரிக்கெட் வீரர்…ஏலத்துக்கு வந்த சொத்து..!

Author: Selvan
24 December 2024, 4:46 pm

வினோத் கம்பளி – புகழின் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி வரை

இந்திய முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் வினோத் கம்பளி திடீரென உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற போது,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் கட்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

Vinod Kambli cricket legacy

இவர் கடந்த சில ஆண்டுகளாக பல வித நோயால் அவதிப்பட்டு வருகிறார்.ஒரு காலத்தில் இந்திய அணிக்காக அபாரமாக விளையாடி புகழின் உச்சத்தில் இருந்தார். 90-களில் புகழின் உச்சியில் இருந்து வீடு,கார் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கினார்.தற்போது அந்த சொத்துக்கள் எல்லாம் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1991 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வானார்.இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய தோழர்,இரண்டு பெரும் ஒன்றாக பள்ளிக்கூடத்தில் படித்து பின்பு ஒரே சமயத்தில் இந்திய அணிக்காக விளையாடினார்கள்.

Vinod Kambli and Sachin Tendulkar friendship

வினோத் கம்பளி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.1996 ஆம் ஆண்டு இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே உலக்கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்று இருக்கும் போது,இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும்,ஒரு பக்கம் வினோத் கம்பளி மட்டும் நிலைத்து நின்று ஆடிட்டு இருக்கும் போது,மறுபக்கம் விக்கெட் சரிந்து கொண்டிருக்கும், அதை பார்த்த ரசிகர்கள் மைதானத்திற்குள் கற்களை வீசியும்,நெருப்பை பற்றவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

உடனே மைதானத்தில் இருந்த வீரர்களை பத்திரமாக அழைத்து சென்று,மேட்ச் பாதியிலே கைவிட்டு,ஸ்ரீலங்கா வெற்றி என முடிவு வந்தது.அப்போது வினோத் கம்பளி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறுவார்.அதுவே அவருடைய கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருந்தது.

இதையும் படியுங்க: கல்லூரி பேராசிரியர் கழிவறையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

இப்படி கிரிக்கெட்டை உயிருக்கு உயிராக ரசித்த வினோத் கம்பளி,அவருடைய தவறான பழக்கத்தால் பெயர்,புகழை எல்லாம் இழந்தார் .இவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போது சாதாரண ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அவர் 2 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார்.தற்போது அதனுடைய வங்கி லோனனை திருப்பி செலுத்த முடியாமல் 8 கோடி மதிப்பில் உள்ள அவருடைய வீடு ஏலத்தில் வந்துள்ளது.

Vinod Kambli health issues

ஒரு பக்கம் வீட்டை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் கம்பளிக்கு சச்சின் உட்பட பல முன்னாள் வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.இவருக்கு ஆரம்பத்தில் சச்சின் எவ்ளோ அறிவுரை கூறியும் கேட்காமல் அலட்சியப்படுத்தினார் என்ற தகவலும் கூறப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 82

    0

    0

    Leave a Reply