வரும் 2026 தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் பாஜக வெற்றி என்ற அறிவிப்பு வெளியாகும் : வினோஜ் பி செல்வம் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 6:49 pm

திருவள்ளூர் : வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கும்முடிபூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் வரிசையாக பாஜக வெற்றி பெற்றது என்ற அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் P செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பம்மது குளத்தில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவராக P.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, அவரை பாஜக மாநில செயலாளர் வினோத் P.செல்வம், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மாலை மற்றும் கிரீடம் அணிவித்து பாராட்டி, கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அறிமுக கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் வினோஜ் P. செல்வம், வரும் 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது என்ற அறிவிப்பு வெளியாகும் வகையில் கட்சியினர் சிறப்பாக பணியாற்றி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி