அன்று ஜான்சன்..இன்று கான்ஸ்டாஸ்…மிரட்டிய பவுலர்கள்…இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Author: Selvan3 January 2025, 7:50 pm
பவுலரை சீண்டி பார்த்து அசிங்கப்பட்ட ஆஸி.வீரர்கள்
இன்று சிட்னியில் நடந்த 5 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் தேவையில்லாமல் வம்பிழுத்தார்,பின்பு பும்ரா தன்னுடைய அசத்தலான பவுலிங்கால் உரிய பதிலடி கொடுத்தார்.
இன்று நடந்த இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரின் போது உஷ்மான் கவாஜா பேட்டிங் ஆட டைம் எடுப்பார்.இதனால் பும்ரா சீக்கிரம் நில் என்று சைகை செய்வார்,அதற்கு சம்மந்தமே இல்லாமல் எதிர்முனையில் இருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் சென்று தேவையில்லாமல் சீண்டுவார்,கடுப்பான பும்ராவும் அதற்கு பதில் பேச பின்பு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்துவார்.
அப்போது பும்ரா வீசிய மிரட்டலான கடைசி பந்தில் கவாஜா விக்கெட்டை அற்புதமாக எடுப்பார்.இதனால் இந்திய வீரர்கள் சாம் கான்ஸ்டாஸ் முன்பு சென்று தங்களுடைய ஆக்ரோஷமான உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.
Fiery scenes in the final over at the SCG!
— cricket.com.au (@cricketcomau) January 3, 2025
How's that for a finish to Day One 👀#AUSvIND pic.twitter.com/BAAjrFKvnQ
இந்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,இதே மாதிரி ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன்,இங்கிலாந்து அணிக்கு இடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதே மாதிரி செய்துள்ளார்.
இதையும் படியுங்க: நா பேச மாட்டேன்…என் BALL-தான் பேசும்…சீண்டிய சாம் கான்ஸ்டஸுக்கு மாஸ் பதிலடி கொடுத்த பும்ரா..!
அப்போது ஜான்சன் எதிர் முனையில் இருந்து கொண்டு ஆண்டர்சனை பார்த்து என்னை விக்கெட் எடுக்க முடியலையா என நக்கலாக பேசுவார்.அடுத்த பந்தில் ஆண்டர்சன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரையன் ஹாரிஷை போல்ட் ஆக்குவார்.அந்த விக்கெட் எடுத்தவுடன் ஆஸ்திரேலியா வீரர் ஜான்சனை பார்த்து,ஆக்ரோஷமாக கொண்டாடினார் ஆண்டர்சன்.
Bumrah vs Konstas from No Striker reminded this Anderson Mitchell Johnson moment !! pic.twitter.com/UxSLHwbQGa
— 🎰 (@StanMSD) January 3, 2025
தற்போது இந்த இரண்டு விடீயோவையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து,இந்த இரண்டு சம்பவங்களிலும் அமைதியா இருந்த பேட்ஸ்மேன் தான் பாதிப்பு அடைச்சுருக்காங்க என கிண்டல் அடித்து வருகின்றனர்.