தமிழகம் முழுவதும் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி அதிக அளவில் பரவி வருகிறது. இது குறித்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 68 நபர்களுக்கு தற்போது காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் காய்ச்சல் அறிகுறிக்கு கடந்த சில நாட்களில் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுய பாதுகாப்பு ஏற்பாடு ஏற்படுத்திக் கொண்டார்களோ அதே போல தற்போதைய சூழ்நிலையிலும் முக கவசம் கைகளை சுத்தமாக கழுவுதல் சானிடைசர் உபயோகிப்பது இடைவெளிகள் அதிகரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோன்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கின்ற காரணத்தினால் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை குழந்தைகள் வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் கதர் பருத்தி போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று சிங்கப்பூர் விமானத்தில் இருந்து கோவை வந்த நான்கு பயணிகளுக்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய முகவரிகள் வாங்கி தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் இருப்பதாகவும், மேலும் தற்போது தமிழகத்தில் பரவியுள்ள இன்ஃப்ளுயன்சா ப்ளூ காய்ச்சல் அறிகுறி 13 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு அதிகளவிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சாதாரணமாகவே பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது பெரியோர்களை பராமரிப்பது போன்ற காரணங்களினால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது காய்ச்சல் அறிகுறி அதிகரித்திருப்பதாக தெரிவித்து இருப்பார்கள் எனவும்.மேலும் கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் Dr.A. நிர்மலா தகவல் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.