காண்டான கோலி…பெண் பத்திரிகையாளருடன் வாக்குவாதம் …வைரலாகும் வீடியோ..!
Author: Selvan20 December 2024, 7:56 pm
செய்தியாளர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கோலி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் மெல்போர்ன் விமானநிலையத்தில் வந்து இறங்கினர்.அப்போது திடீரென அங்கே இருந்த பெண் செய்தியாளரிடம் சென்று, விராட் கோலி கோவமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!
அவர் தனது குடும்பத்துடன் சென்ற போது பெண் செய்தியாளர் கேமராவை வைத்து தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்க முற்பட்டதால் கோவம் அடைந்துள்ளார்.
Virat Kohli misbehaved at Melbourne airport with @7NewsMelbourne reporter.
— Sama Umair (@umair6723) December 19, 2024
Virat Kohli loses his cool after his bad form🥵👇pic.twitter.com/AJT8j8U5Q8
விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் தங்களுடைய குழந்தைகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வராமல் பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் தன்னை கேட்காமல் என் குழந்தையை எப்படி நீங்க போட்டோ எடுக்கலாம்,உடனே டெலீட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.