IPL கிங்குடா.!38 ரன் தான்..கோலி படைக்க இருக்கும் புது ரெகார்ட்.!
Author: Selvan22 March 2025, 6:02 pm
விராட் கோலியின் ஐபிஎல் சாதனைகள்
2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது,முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதையும் படியுங்க: ‘எம்புரான்’ படத்திற்கு மோகன்லால் செய்த தியாகம்..தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டார்களா.!
இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த போட்டியில்,விராட் கோலி ஒரு முக்கிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளார்.அவர் இன்னும் 38 ரன்கள் அடித்தால்,ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு நான்கு அணிகளுக்கு எதிராக 1000+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இருக்கிறார்.
அவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் (1053 ரன்கள்),டெல்லி கேப்பிடல்ஸ் (1057 ரன்கள்),பஞ்சாப் கிங்ஸ் (1030 ரன்கள்) ஆகிய அணிகளுக்கு எதிராக 1000+ ரன்கள் அடித்துள்ளார்.இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 ரன்கள் அடித்தால்,இந்த சாதனையை தொடரும் முதல் வீரர் ஆவார்.
மொத்தமாக 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார்.அவரது சராசரி 38.0 ஆக உள்ளதுடன்,8 சதங்கள்,55 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 113 ரன்கள் என்ற சாதனையுடன் விளையாடி வருகிறார்.
விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார்.இன்னும் சில ஆண்டுகள் விளையாடினால் 10000+ ஐபிஎல் ரன்கள் அடையும் முதல் வீரர் என்பதோடு,அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.