இரவு ஒரு மணிக்கு விராட்கோலிக்கு நடந்த அதிர்ச்சி…டெல்லி அணி செய்த மோசமான செயல்…வைரலாகும் பேட்டி..!

Author: Selvan
1 February 2025, 8:08 pm

விராட்கோலி தந்தை எடுத்த உறுதியான முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விராட் கோலி,இவர் தன்னுடைய தனித்துவமான பேட்டிங்கால் பல சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய மோசமான பார்மால் விவாத பொருளாக மாறியுள்ள கோலி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினார்.

Virat Kohli selection controversy

இதனால் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இந்த நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் தன்னுடைய சிறுவயதில் சந்தித்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்,தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: இந்திய அணி செஞ்சது சரியா…ICC ரூல் என்ன சொல்லுது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்..!

அந்த பேட்டியில் கோலி கூறியது,நான் அண்டர் டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென என்னை அணியில் இருந்து நீக்கினார்கள்.அதற்கு பதிலாக வேறொரு வீரரை தேர்வு செய்தார்கள்,அதன்பிறகு எனது தந்தைக்கு அழைத்து உங்கள் மகனுக்காக நீங்கள் பணம் கொடுத்தால் இரண்டு ஆட்டத்திற்கு பிறகு அணியில் சேர்க்கலாம் என்று கூறினார்கள்.

Virat Kohli Delhi team incident

உடனே எனது தந்தை அவனை விளையாட வைக்க ஒரு பைசா கூட கொடுக்கமாட்டேன்,அவனது திறமையால் வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும்,இல்லையென்றால் அவனுக்கு இதுதான் விதி என கடந்து போக வேண்டி தான் என்று கூறினார்.டெல்லி அணியின் இந்த மோசமான நிகழ்வு விராட்கோலி பின் நாளில் பெரும் ஜாம்பவானாக உருவாக அடித்தளமிட்டது என்று கூறப்படுகிறது.

  • Manikandan interview highlights ‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!
  • Leave a Reply