விருதுநகரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் : 4 பேரிடம் விசாரணை

Author: kavin kumar
29 January 2022, 5:06 pm

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி பிரதான சாலையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 4 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2402

    0

    0