புரோமோவுக்கே இந்த நிலைமையா..? விருமன் படத்தை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள். !

Author: Rajesh
8 May 2022, 5:21 pm

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், கருணாஸ், சூரி, மைனா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துயுள்ளது.

விருமன் படத்தில் கார்த்தி கிராமத்து கெட்டப்பில் உள்ளார். இதனிடையே கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் கிராமத்தில் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.விருமன் படத்திற்கு முன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் தான் கொம்ன். இந்த படத்தினை தொடந்து, மீண்டும் இதே கூட்டணியில் விருமன் படம் உருவாகியுள்ளது

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த பாடலின் ஆரம்பத்தில் கஞ்சா பூ கண்ணால என்று தொடங்குகிறது.

இப்படத்திற்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும் மறுபுறம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் மற்றும் கொம்பன் படங்களின் சாயலில் இப்படம் இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் கார்த்தி அதிதி ஷங்கரை ஹே தேனு என கூப்பிடுவது பருத்திவீரன் படத்தில் ஹே முத்தழகு என கூப்பிடுவது போலவே உள்ளது.

அதேபோல் அதிதி ஷங்கரும் பருத்திவீரன் படத்தில் உள்ள பிரியாமணி போலவே தோற்றமளிக்கிறார். மேலும் இந்த பாடலும் ஜெயம் ரவியின் தாஸ் படத்தில் இடம்பெற்ற சக்கப்போடு போட்டாலே என்ற பாடலின் காப்பியாக உள்ளது என நெட்டிசன்கள் வருத்து எடுக்கின்றனர்.

இந்நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோக்கே இந்த நிலைமை என்றால் படம் வெளியான பிறகு என்ன ஆகுமோ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், விருமன் படம் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…