உடலுறவின் போது கணவருக்கு தோன்றிய விபரீத ஆசை… இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 11:16 am

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான அத்திக்கோயில் மலைவாழ்மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). இவர் மலையடிவாரத்தில் உள்ள சங்கர்ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர். இந்நிலையில் கணவரை பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த ஏசுராணி (எ) உமா (28) என்பவரை மூன்றாவதாக வனராஜ் திருமணம் செய்து, அந்த தோட்டத்தில் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இரவில் பிள்ளைகள் இருவரும் தூங்கிய பின்னர், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த வனராஜ், மனைவி இறந்தது குறித்து வெகுநேரம் கழித்தே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஏசுராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வனராஜிடம் போலீஸார் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது :- வனராஜூம், ஏசுராணியும் இரவு மோட்டர் அறையில் தங்கியிருந்த இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது தன்னால் இதற்குமேல் உடலுறவு கொள்ளமுடியாது என ஏசுராணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், வனராஜ், தனது கையில் இருந்த டார்ச்லைட்டை, மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தியுள்ளார். இதனால் அலறித்துடித்த ஏசுராணி அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், வனராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 792

    0

    1