சாலையை கடக்க முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 8:03 pm

விருதுநகர் : அரசு ஆய்வு மாளிகை முன்பு சாலையை கடக்கும் முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நவநீதன், கணேசன் மற்றும் சக்திவேல் கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்லும் பொழுது, மதுரை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆய்வு மாளிகை பிரிவில் காரில் கடக்க முயற்சி செய்துள்ளனர்.

சாலையை கடக்க முயன்ற போது அந்த கார் மீது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து பேருந்து மோதியதில் கார் சாலையில் ஓரம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த கடையின் முன்பு விழுந்தது. இதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து சாலை கடக்கும் முயன்ற மற்றொரு கார் மீதும் லேசாக உரசியது. இதில், அந்த கார் சேதமடைந்தது.

கோவில்பட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற நவநீதன் மற்றும் சக்திவேல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கணேசன் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றன.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்