‘சப்புனு அடிச்சிடுவேன்’… பொதுமக்கள் முன்பு உதவியாளரை திட்டிய மாவட்ட ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 4:28 pm

மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளரை சப்புனு அடிச்சிடுவேன் என பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது. தனது உதவியாளரை அழைத்து மாவட்ட ஆட்சியர் சிகப்பு கலர் பேனா கேட்டுள்ளார். ஆனால் உதவியாளர் கருப்பு கலர் பேனா கொடுத்ததால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உதவியாளரை “சப்புனு அடிச்சிடுவேன்’ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியரின் இச்செயல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!