சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் ; திமுக நிர்வாகிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு.. 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 11:42 am

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலய பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்த சட்டவிரோத செயலுக்கு திமுக பிரமுகர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம். இந்த வனப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்குட்பட்ட பகுதியில் விவசாயம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சில சமூக விரோதிகள் முறைகேடாக அத்துமீறி வனப்பகுதி மற்றும் பட்டா நிலங்களுக்குள் புகுந்து தொடர் மண் திருட்டில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா தலைமையிலான காவல்துறையினர் சரணாலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவண்ணாமலை, பந்தப்பாறை உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில், 2 ஜேசிபி வாகனங்கள் மூலம் 5 டிப்பர் லாரி, மற்றும் 3 டிராக்களில் சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் மண் அள்ளப்பட்டிருப்பதை கண்டு அவ்வாகனங்களை பிடித்து வாகனத்தை இயக்கியவரிடம் விசாரணை செய்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மண் திருட்டில் ஈடுபட்ட 5 டிப்பர் லாரி மற்றும் 3 டிராக்டர்கள், 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தலில் முக்கிய திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 547

    0

    0