கோவில் குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி : தற்கொலையா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan16 August 2022, 1:25 pm
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் குளத்தில் நீரில் மூழ்கி அடையாளம் தெரியாத தாய் மகள் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம். இதனை தினந்தோறும் ஏரளமானோர் துணி துவைப்பது. குளிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் குளத்திற்கு சென்ற போது குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலம் மிதந்துள்ளது.

இதணையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலீசார் குளத்தில் விழுந்து கிடந்த இரண்டு பெண்கள் சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், குளத்தில் நீரில் மூழ்கி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார்களா ? இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா? இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.