விருதுநகர் : சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து 21 மாணவிகள் காயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார்.
கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கல்லூரி பேருந்து சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி வந்து கொண்டிருந்த போது, பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.
பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவிகளை மீட்டு விபத்தில் காயமடைந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த பிரியா, மஞ்சளா, கெளரி , முத்தீஸ்வரி, அபர்னா, ஸ்வேதா உள்ளிட்ட 7 மாணவிகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சாத்தூர் நகர் காவல் காவல் நிலைய ஆய்வாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.