ஆசைக்கிணங்க பள்ளி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு : மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது…!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 11:44 am

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் நோக்கத்தோடு பேச கட்டாயப்படுத்தியதாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 30 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் மகாலிங்கம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடந்த 2 மாதமாக பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!