உடனடியாக வராததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் சாமி.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத விஷால்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 1:29 pm

உடனடியாக வராததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் சாமி.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத விஷால்!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால், ஆர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் நடிகர்கள் விஷால், ஆர்யா பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய விஷால் காலை 11 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி, நல்ல மனிதர், தைரியமான அரசியல்வாதி ஒருவர் மறைந்த பிறகுதான் சாமி என்று அழைப்பார்கள். ஆனால், கேப்டன் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று கூறினார.

மேலும் அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும் என்று தெரிவித்தார். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும். இதனால்,விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19ஆம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 469

    0

    0