பிரபல தயாரிப்பாளரின் குடும்பத்தை ஏமாற்றிய விஷால்.? பல கோடி ரூபாயை தர மறுப்பதாக குற்றச்சாட்டு.!

Author: Rajesh
16 May 2022, 7:28 pm

நடிகர் விஷால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வேறு தயாரிப்பாளர்களின் படங்கள் என்றால் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் அவர் தயாரிக்கும் படங்களில் மட்டும் ஒழுங்காக வந்து கலந்து கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.

மேலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சின்னத்தம்பி, பாஞ்சாலங்குறிச்சி, சட்டம் என் கையில் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கேபி பிலிம்ஸ் பாலு.

இவர் விஷாலை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென இறந்துவிட்டார். மேலும் இப்படத்திற்காக பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கே பாலு இறப்புக்கு வந்த விஷால் இவருக்கு ஒரு படம் பண்ணி தர போவதாக கூறினார்.

அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து பாலு குடும்பத்திற்கு உதவ உள்ளதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஷால் இவ்வளவு நன்றி மறவாதவராக தன்னுடைய தயாரிப்பாளர் குடும்பத்திற்கு, அவர் இல்லாத போதும் உதவ முன்வந்தது பாராட்டுக்குரியது எனக் கூறிவந்தனர். ஆனால் விஷால் அந்த மேடையில் பேசியதைத் தவிர அதன் பின்பு எந்த வேலையும் இன்னும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் 7 கோடியை வாங்கிக் கொண்டு விஷால் இதுவரை படம் பண்ணி தராமல் இழுத்தடிப்பது கே பாலுவின் குடும்பம் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த புகார் அடிப்படையில் விரைவில் போலீஸ் விசாரிக்கும் என கூறப்படுகிறது

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்