விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

Author: Hariharasudhan
4 March 2025, 8:57 am

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை: விஷால் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமாரின் இல்ல நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மொழித் திணிப்பு என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம். ஆனால், ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதைக் கொண்டு வர முடியாது.

மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் அதனைத் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி” எனக் கூறினார். தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு, மேலே கையைக் காமித்துவிட்டு (நடிகர் ரஜினிகாந்த் போல) கடந்து சென்றார்.

விஜய் என்ன செய்ய வேண்டும்? மேலும் பேசிய அவர், “நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும். அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்.

Vishal about Vijay

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 3) பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார். தற்போது, விஜய் குறித்த விஷாலின் கருத்துக்கு தவெகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

விஷால் நடிப்பில் இறுதியாக, பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த மதகஜராஜா படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதேநேரம், விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துக் கொண்டே, அவ்வப்போது தவெக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி