மகள் செய்ததை நினைத்து கதறி அழுத அர்ச்சனா.. எனக்கு நீ இன்னொரு தாய்..! Viral வீடியோ.!

Author: Rajesh
13 July 2022, 1:33 pm

பிக்பாஸ் போட்டியாளரும், தொகுப்பாளினியும் அர்ச்சனா அவருடைய எளிமை, அழகு, தமிழ் உச்சரிப்பு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். அனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சில விமர்சனங்களுக்கும் உள்ளானார்.

பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்பு, தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களை கண்டு துவண்டு விடாமல் அவற்றிக்கு பதிலடியும் கொடுத்தார். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் மகள் ஜாராவுடன் இணைந்து நடித்திருந்த இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது. ‘டாக்டர்’ படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இவர் நேற்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது, இவருடைய மகள் ஜாரா கொடுத்த உணர்ச்சிகள் கலந்த பரிசை பார்த்து கதறி அழுத்துள்ளார் அர்ச்சனா. இதை பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அர்ச்சனா கூறியுள்ளதாவது, தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாள் ஸ்பெஷலாக என்ன செய்தார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

ஜாரா தனக்கு ஏழு பக்கம் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மிகவும் வலுவான உணர்ச்சிகள் நிறைந்திருந்தன, பின்னர் எனக்கு என் முதல் சாலிடர் கல் பதித்த மோதிரத்தை பரிசளித்தார். எனது 40ஆவது பிறந்த நாளின் அழகான தருணத்திற்கு ஜாராவிற்கு நன்றி . இதற்கெல்லாம் உதவிய அருண் மற்றும் அனிதா, அதாவது தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் கணவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் நான் உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது, என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு, ஜாரா உங்களுடைய மகள் அல்ல இரண்டாவது தாய் என்பது போல் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 803

    3

    0