இந்த நிமிடம் வரை பார்க்கிறோம்.. சசிகலா சூசகம்!

Author: Hariharasudhan
13 November 2024, 3:08 pm

ஸ்டாலின், உதயநிதி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தேர்தல் வேலையை மட்டுமே பார்ப்பதாக சசிகலா கூறியுள்ளார்.

தூத்துக்குடி: திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக வி.கே.சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அரசியல் சூழ்நிலை எப்போதும் போல தான் உள்ளது. புதிய கட்சிகள் தொடங்கியவர்கள் பற்றி 2026இல் தான் தெரியும்” எனக் கூறினார்.

தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது பற்றிய கேள்விக்கு, “தேர்தல் வரப்போகிறது. ஆகவே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பயணத்தை தொடங்கி இருப்பார்கள். அரசு அமைந்து நான்கு வருடமாகி உள்ளது. மக்களுக்குச் செய்ய வேண்டியது எதுவும் செய்யவில்லை.

ஆனால், தேர்தல் வேலைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இது 2026ல் எதிரொலிக்கும். தமிழகம் முழுவதும் கொலைகள் அதிகமாக உள்ளது. அனைவருக்கும் தெரிந்த விஷயம், பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் போக முடியவில்லை. அதுதான் தற்போதைய சூழல்.

இதையும் படிங்க: இங்க கேட்டா பதில் அங்கிருந்து வருது.. அப்போ CM பொம்மை தானே? இபிஎஸ் பதிலடி!

ஆனால், அவர்கள் ஆட்சியில் மிகவும் நன்றாக செய்கின்ற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழ்நாடு மக்கள் எந்த அளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பதை இந்த நிமிடம் வரைக்கும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இது 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்” எனத் தெரிவித்தார்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!