தொண்டர்களே தயாரா இருங்க… களத்தில் குதித்த கமல்ஹாசன் : மக்கள் நீதி மய்யம் போட்ட அடுத்த பிளான்.. தேதியுடன் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2022, 8:12 pm
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்மாத இறுதியில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், செப்டம்பர் முதல் மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செப்டம்பர் 17 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில், மய்யம் மாதர்படை சாதனையாளர்கள் விருது விழா நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.