80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார் என உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை விளாங்குடி பகுதியில் ஆர்.ஜே.தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜூகேஷனல் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ, மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துக்காக தொடங்கப்பட்டது அதிமுக. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.
கட்சிக்குள் ஒரு தலைவர் நிர்வாகியை நீக்குவது சாதாரணம். அதுபோலத்தான் கருணாநிதி எம்ஜிஆரை நீக்கினார். நீக்கப்பட்ட எம்ஜிஆருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். சாதாரண இயக்கமல்ல அதிமுக.
இது திராவிட பூமி. தந்தை பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண்.
மாற்று சக்தி வரக்கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை கடைப்பிடிப்பது அதிமுக.
எத்தனையோ சட்ட திட்டங்கள் உள்ள அதிமுகவிற்கு எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார். 80 சதவீதம் யார் ஆதரிக்கிறார்களோ அவருக்கு தான் ஆதரவாக இருக்க வேண்டும் என உள்ளது. அழுவது போல பதழுதழுத்த குரலில் பேசுகிறார்.
அதிமுக இயக்கம் வீழாது. புத்தெழுச்சியோடு மீண்டும் வரும். தொண்டர்களை பிரித்து செல்ல முடியாது. அகில இந்திய கட்சிக்கோ மாற்றுக்கட்சிக்கோ தொண்டர்களை அழைத்துச்செல்ல முடியாது
திமுகவில் எளிய தொண்டன் முதலமைச்சராக முடியுமா. அந்தக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா. திமுக ஆட்சியில் ஊடக சுகந்திரம் சினிமா சுகந்திரம் உள்ளதா.
தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சி வசப்படக்கூடாது. அதிமுக தொண்டர்கள் சாதி மத இனத்தை சொல்லி பேசுபவர்கக்கு இடம் தராதீர்கள். சாதி மதம் சாராதவர்கள் அதிமுக.
பிராமணப்பெண்ணை தலைமையாக கொண்டு செயல்பட்ட இயக்கம் அதிமுக. அவர் தான் 69%இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். கட்சிக்காக சத்யா ஸ்டூடியோவை உழைத்த சம்பாதித்த பணத்தை எழுதி வைத்தவர் எம்ஜிஆர்.
திமுக ஒரு தீய சக்தி. எம்ஜிஆரின் ரசிகர்களே கழகத் தொண்டர்கள் இயக்கத்தை ஆழமாக நேசிப்பவர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். காசுக்கு வேஷம் போடுவார்கள் எங்கள் பக்கம் இல்லை.
அதிமுக ஆயிரங்காலத்து பயிர். தமிழகத்தில் மற்ற கட்சிகள் சுயநலத்தோடு செயல்படுகிறது அதிமுக அப்படி இல்லை. அதிமுகவின் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறிய தி.க தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் ஜாதி மத வேறுபாடு பார்ப்பதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை முதல்வராக்க அழகு பார்த்தது அதிமுக.
சாதி மதத்தைச் சொல்லி அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். நாயரான எம்ஜிஆரும் பிராமணப் பெண்ணான ஜெயலலிதாவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஓபிஎஸ் இபிஎஸ் தலைவராக்கி அழகு பார்த்த கட்சி அதிமுக.
இந்த இயக்கத்தை சாதி மதத்தின் பெயரைச் சொல்லி பிரிக்க முடியாது. அதிமுகவை எந்த ஒரு மாநிலக்கட்சியாலோ தேசிய கட்சியாலோ அசைக்க முடியாது, அழிக்க முடியாது. தொடக்கத்திலும், நடுவிலும் அழுவது போல தழுதழுத்த குரல் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
This website uses cookies.