சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அட்டைகள் இல்லாதவர்கள், வேறு எந்த ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு மாநில உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை, அல்லது தமிழக மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
1) ஆதார் அட்டை
2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
3) புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
4) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு
5) ஓட்டுநர் உரிமம்
6) பான் கார்டு
7) தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
8) இந்திய கடவுச்சீட்டு
9) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10) மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
11) பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
நகர்ப்புற உள்ளாட்சி நடைபெறும் வேளையில் சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க, மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.