கோவையில் வாக்கு எண்ணும் பணி திடீர் நிறுத்தம்.. பரபரப்பாக காணப்பட்ட எண்ணிக்கை மையம் : போலீசார் குவிந்ததால் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2022, 12:26 pm

கோவை : வாக்கு எண்ணும் மையத்தில் காவலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதன் பாதுகப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் மற்றும் கமேண்டோ போலீசார், ஊர்காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனால் அங்கு சிறிது நேரம் போலீசார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1414

    0

    0