உதயநிதிக்கு ஓட்டு போடுங்க… தலைமையை போல உளறிய திமுக எம்எல்ஏ : பரப்புரையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 6:56 pm

உதயநிதிக்கு ஓட்டு போடுங்க… தலைமையை போல உளறிய திமுக எம்எல்ஏ : பரப்புரையில் பரபரப்பு!!

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு விளாங்காடு பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவள்ளூர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி மேல தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விளங்காடு பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தை கேள்வி கேட்டனர்.

அப்போது அவர் வீட்டுமனை பட்டா வழங்க உதயநிதி ஸ்டாலின் குழு அமைத்துள்ளதாகவும் அந்த குழு மூலம் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை விவாதித்து வருவதாகவும் உதயநிதிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்த அவர் பின்னர் சுதாரித்து மன்னிக்கவும் சசிகாந்த் செந்திலுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதேபோன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியுமா என்பது தெரியாது ஆனால் உங்களுக்கு பிரச்சனை என்றால் உங்களோடு இருப்பேன் என பேசி பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu