தேர்தலுக்கு தயாரான வாக்குப்பதிவு இயந்திரங்கள் : நேரில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan12 February 2022, 5:48 pm
கோவை : கோவை மாநகராட்சியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ஹர் சகாய் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகரை பொருத்தவரை இங்குள்ள 100 வார்டுகளுக்கான தேர்தலுக்காக வாகுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாலர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை கோவை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ஹர் சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.