மதுக்கரை அரசுப்பள்ளிக்கு VSI நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் ; ரூ.7 லட்சம் மதிப்பிலான மதநல்லிணக்க அறை திறந்து வைப்பு

Author: Babu Lakshmanan
27 January 2024, 2:44 pm

கோவை ; மதுக்கரை அருகே VSI நிறுவனம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.

கோவையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ஒன்றான VSI கிரஷர் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது.

ரூ.7 லட்சம் மதிப்பிலான உணவக அறை கட்டி முடிக்கப்பட்டது. இந்த உணவக அறையானது குடியரசு தினமான நேற்றைய தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 10 மேஜைகளும், நூலகத்திற்கான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பசுமையை வலியுறுத்தும் விதமாக 100 மரக்கன்றுகளும் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.

  • Suchitra Vishal இரவில் விஷாலை வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்ட? சுசித்ராவை விளாசும் பிரபலம்!
  • Views: - 320

    0

    0