‘ஐ போன்’ மட்டுமல்ல.. ‘வாழ்நாள் பரிசு’ கொடுத்து அசத்திய ஐசரி கணேஷ்: இதுதான் மிகப்பெரிய பரிசு என கண்கலங்கிய Cool Suresh…!

Author: Vignesh
27 September 2022, 7:15 pm

வெந்து தணிந்தது காடு படத்திற்கு குரல் கொடுத்த கூல் சுரேஷுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.

நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட நடிகர் கூல் சுரேஷும் ஒரு காரணம். சிம்புவின் தீவிர ரசிகனான அவர், தான் செல்லும் இடமெல்லாம் ‘வெந்து தணிந்தது காடு… வணக்கத்த போடு’னு சொல்லி வந்தார். அவரின் இந்த டயலாக் பாப்புலர் ஆனதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் எழச்செய்தது.

தற்போது படமும் ரிலீசாகி மாபெரும் வசூல் சாதனை செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகிவிட்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சமீபத்தில் சக்சஸ் மீட் ஒன்றை நடத்தி இருந்தனர். அதில் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசாக அளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.

இதையடுத்து, வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் பண்ணிய கூல் சுரேஷுக்கு ஏதாவது பரிசு வழங்குமாரு ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்று தற்போது கூல் சுரேஷை நேரில் அழைத்து பாராட்டிய ஐசரி கணேஷ், அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி கூல் சுரேஷின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவரிடம் உறுதி அளித்திருக்கிறார் ஐசரி கணேஷ். அவர் சிம்புவுக்கு கார் கொடுத்தார், கவுதம் மேனனுக்கு பைக் கொடுத்தார். அதைவிட எனக்கு கொடுத்தது தான் மிகப்பெரிய பரிசு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த கூல் சுரேஷ், ஐசரி கணேஷ் இனி தனக்கு கடவுள் எனக்கூறி அவரது புகைப்படத்தை தனது வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கியபடி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…