திமுக ஆட்சி வீட்டுக்குப் போக இன்னும் 24 அமாவாசை காத்திருங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு..!!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 1:25 pm
திமுக ஆட்சி வீட்டுக்குப் போக இன்னும் 24 அமாவாசை காத்திருங்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு..!!
கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய மஞ்சுவலி, ஆண்டிப்பட்டி கோட்டை, புதுப்பட்டி, குரும்பாடி, அரவக்குறிச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மகளிர்காக வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு உரிமைத்தொகை பாதி பேருக்கு வழங்கப்படவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு உரிமை தொகை அனைவருக்கும் வழங்கப்படும் எனக் கூறிய நிலையில் இன்னும் பாதி பேருக்கு வழங்கவில்லை என விமர்சித்தார்.
தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிருக்கு தாலிக்கு தங்கம், திருமணம் உதவித்தொகை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டனர்.
கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் விளங்கப்படும் என கூறிவிட்டு பாதி நபர்களுக்கு கொடுத்துவிட்டனர். மீதமுள்ள பெண்களுக்கு வழங்கவில்லை இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்றார்.
இன்னும் 24 அமாவாசையில் தான் இந்த விடியா திமுக ஆட்சி வீட்டுக்கு போய்விடும் அம்மா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் அதற்காக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்
இந்த நிலையில் கடந்த கரூர் நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிமணி வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க வரவில்லை வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல கூட வராத ஒரு எம்பி ஜோதிமணி எதற்கு மீண்டும் ஓட்டு கேட்டு வருகிறார் அனைத்தும் நடிப்பு என்று அப்பொழுது தெரிவித்தார்.