‘எழுந்து வாடா.. பாப்பா உன்னை கூப்பிடுறா’ : பிறந்த குழந்தையை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி.. கையில் குழந்தையுடன் கதறிய மனைவி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 8:17 pm

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு மாத குழந்தை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலியான நிலையில் கைக்குழந்தையுடன் கணவன் உடலை பார்த்து கதறிய மனைவியின் செயல் காண்போர்களை கண் கலங்கச் செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கே.அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22) என்ற இளைஞர். இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் வேப்பன்வலசு கிராமத்தை சேர்ந்த லாவண்யா எனற 20 வயது பெண்ணிற்கும் திருமாணகி தற்போது அவருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

குழந்தை பிறந்துள்ளதால் மனைவி லாவண்யா தனது தாய்வீட்டில் உள்ளார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க நேற்று வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மஇருசக்கர வாகனத்தில் சென்ற அருண்குமார் நிலைதடுமாறி புதூர் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர்‌ மீது மோதி சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த சத்திரபட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

வேலைக்கு சென்ற கணவர் வீடு கூட திரும்பவில்லையே.. என மருத்துவமனைக்கு வந்த மனைவி கைக்குழந்தையுடன் கணவனின் உடலை பார்த்து எழுந்து வா அருணு, பாப்பா உன்னை கூப்பிடறா என கதறிய காட்சிகள் காண்போரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

  • இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!