பொள்ளாச்சி கனமழை; பக்கத்து வீட்டு சுவர் விழுந்தது; இரவு தூக்கத்தில் பிரிந்த உயிர்,..

Author: Sudha
30 July 2024, 1:57 pm

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய மகன் ஹரிஹரசுதன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு ஹரிஹரசுதன் தனது வீட்டின் மறு அறையில் தனது ஆசை நாய்க்குட்டியுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் உயிரிழந்தார்.இடிபாடுகளில் சிக்கி நாய்க்குட்டியும் உயிரிழந்தது.

இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அன்பழகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது சுவர் இடிந்தது தெரியவந்தது. இதை அடுத்து ஹரிஹரசுதன் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

சுவர் இடிந்து வாலிபர் ஹரிஹரசுதன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?